திங்கள், 4 ஜனவரி, 2010

நரகத்திலிருந்து நான் ...

















கண் விழிக்க,
கூசும் விளக்குகள் கீழ் 
படுத்திருந்தேன் ...

 சுமோ என் மீது
மோதியதாக ஞாபகம்//


மருத்துவர்கள் அவர்களுக்குள் 
பேசி கொண்டதை நான் கேட்டேன்//

அவசரமாக எனது உறுப்புகளை
விலை பேசி கொண்டிருந்தார்கள் //


என் கண்கள் திறந்து இருந்தது..
எனக்கு நன்றாக நினைவும் இருந்தது..
ஆனால் என்னால் அசைய முடிய வில்லை//

என் பெற்றோரிடம்,
எனக்கு மூளை சாவு என்றனர்//

காப்பற்றுங்கள்.. ,காப்பற்றுங்கள்.. ,
என கத்தி சொல்ல வேண்டும்
போல இருந்தது......
என்னால் முடியவில்லை//


நான் எவ்வளவோ கத்தியும்
அவர்களுக்கு கேட்கவே இல்லை//

அழுது கொண்டே ,
அவர்களும் போய் விட ....//

 மருத்துவர்கள்  சூழ்ந்து கொண்டு ,
என்னை கூறு போட்டார்கள் //

என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை
அழுவதை தவிர.//

திக் திக் .......


 




 

                                                         நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இரண்டாம் ஆட்டசினிமா பார்த்து திரும்பி கொண்டிருந்தேன் . நகரத்தின் சாலையில் பனி பொழிந்து கொண்டிருந்தது. காற்றும் சற்று வேகமாக அடித்து கொண்டிருந்தது . குளிரில் உடல் சற்று விரைதிருந்தது. வேகமாக நடந்து கொண்டிருந்தேன். எனது அறைக்கு திரும்பும் சாலையில் திரும்பினேன் . பேப்பர் பொறுக்கும் நிறைய பேர் கடைகளின் வாசல்களில் படுத்து இருந்தார்கள். ஒரு சிலர்க்கு அருகில் கொசுவர்த்தி சுருள் புகைந்து கொண்டிருந்தது. சிலர் மதுவின் நெடியில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். யாராவது எழுந்து என்னை தாக்கி விடுவார்களோ என ஐயமாக இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு நடந்தேன். திடீரென்று நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது 'போலிஸ்க்கு கேஸ் கிடைக்கவில்லை எனில் நம்மை மாதிரி ஆள்களை கூடபிடித்து போய்விடுவார்கள் என்று ' அதே போல் தூரத்தில் போலீஸ் வாகனம் வருவது தெரிந்தது .

                                                உடனே இடப்பக்கமாக வேறு ஒரு தெருவில் திரும்பினேன் ; அந்த வழியாக சுற்றி என் அறைக்கு சென்று விடலாம் என்று எண்ணினேன். ஆனால் அந்த தெருவில் நாய்கள் அதிகமாக இருந்தது . அவைகள் என்னை கடித்து விடுமோ என பயமாக இருந்தது . நினைத்தது போலவே ஒரு சில நாய்கள் என்னை பார்த்து குறைத்தபடி ஓடிவந்தன . அவைகள் ஏரியாவிற்குள் பிரவேசித்து விட்ட என்னை எரிச்சலில் கடிக்க பாய்ந்தன . பயந்த படி நான் நின்று விட்டேன் . ஒரு பெட்டைநாய் அங்கு வர மற்ற நாய்கள் ஒன்றோடொன்று சண்டை போட்டு கொண்டு என்னை விட்டு விட்டன . சற்று ஆசுவாச படுத்தி கொண்டு எனது தெரு பக்கம் வந்தேன் .


                                          தெருவின் மறு முனையில் அதே போலீஸ் ஜீப் திரும்பவும் வந்தது . அவர்களிடம் மாட்டி கொண்டால் இன்றைக்கு தூங்க முடியாது என்று நான் மிக வேகமாக நடந்து வீட்டை அடைந்தேன் . இரணடாவது மாடிக்கு மூச்சிரைக்க ஏறினேன் . எல்லோரும் தூங்கி கொண்டிருபதர்க்கான குறட்டை ஒலி ஒவ்வொரு அறையிலும் வந்து கொண்டிருந்தது . கடைசியான எனது அறைக்கு சென்று பூட்டை திறந்தேன் . கரு கரு என அறைஇருட்டாக இருந்தது . லைட்டை போட்டு கதவை அடைத்து தாழ்பாள் போட்டு கொண்டேன் . உடைகளை களைந்து இரவு உடைக்கு மாறி, விரிப்புகளை விரித்து லைட்டை அணைத்து படுத்துவிட்டேன். படபடப்பு இன்னும் அடங்கவில்லை . ஜன்னல் கதவுகள் காற்றில் வேகமாக அடித்தபடி இருந்தன . எழுந்து ஜன்னல் கதவை சாத்தி ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்கி போனேன் . 




















சனி, 26 டிசம்பர், 2009

மரணம் .


 














தூங்கிய பின் //
விழித்து கொள்கிறது ...
கனவு .


கனவுகளின் கண்கள் //
மூடிய பின் ..
விழித்து கொள்கிறது ..
மரணம் .






செவ்வாய், 22 டிசம்பர், 2009

காகம் கரைகிறது ..























வாசலில் ,
இன்றைக்கும் காகம் கரைகிறது ....


கல்யாணம் செய்து கொண்டு  
வீட்டை விட்டு  ஓடி வந்து 
ஆறேழு வருடங்கள் ஓடி விட்டது .


வாசலை எதிர் பார்த்து நான் .

 ஒரு பிடி அரிசி அதிகமாகவே போடுகிறேன்,
வந்தால் என் உறவுகளுக்கு ,
இல்லையனில்  கரையும் காகத்திற்கு . 



ஞாயிறு, 20 டிசம்பர், 2009